புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

புவியியல் : சூழலியல் முகாமைத்துவம்

இலங்கையின் பாடசாலை முறைமையில் வகுப்பறைப் பாடம் மற்றும் தனியார் போதனை நிலையங்களில் வழங்கப்படும் போதனை தவிர்ந்த ஏனைய சுயகற்றல் முறைகளினூடாகக் கற்பதற்கான தகுதி வாய்ந்த நூல்களின் பற்றாக்குறை க.பொ.த. உயர்தர மாணவர்களைப் பொறுத்த வரையில் ஒரு குறைபாடாகக் கூறப்பட்டு வந்துள்ளது. அரசாங்கத்தின் இலவச பாடநூல் விநியோகமானது உயர்தர வகுப்புக்களைச் சென்றடைவ-தில்லை. இன்றைய கல்வி முறைமையின் புதிய நோக்கங்களுக்கமைய மாணவர்கள் சுயகற்போராக விருத்திபெறல் வேண்டும் என்னும் குறிக்கோள் ஓர் உயர்தரமான கல்வியின் நோக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 
தமிழ்மொழி வழி மாணவர்கள் இவ்வாறான நோக்கத்திற்கமைய விருத்தி பெறுவதற்கு அம்மொழி வழியிலான பாடநூல்களும், இணையச் சஞ்சிகைகளும், இணையத்தளங்களும் தேவை. குறிப்பாக, புவியியல் பாடத்தினை அதிலும் குறிப்பாக, புவியியல் பாட ஏற்பாடு சார்ந்த பல விஞ்ஞான ரீதியான புதிய துறைகளில் துணைப்பாட நூல்களின் பற்றாக் குறையானது புவியியல் மாணவர்களால் இன்று நன்கு உணரப்பட்-டுள்ளது. அத்துடன் சிலகாலத்துக்கு முன்னர் பல்கலைக்கழகங்களில் புவியியலைக் கற்ற பட்டதாரி ஆசிரியர்களும் புவியியல் துறையில் விருத்தி பெற்றுவரும் புதிய அறிவுத் தொகுதியை தமிழ் வழியினூடாகப் பெற்றுக்-கொள்ள வேண்டிய ஓர் அவசியமும் உள்ளது. இப்பின்புலத்திலேயே க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு உதவும் வகையில் புவியியல்: சூழலியல் முகாமைத்துவம் என்னும் தலைப்பில் ஒரு புதிய நூலை எழுத முற்பட்டோம். 
கலைத்துறைப் பாடங்களுள் ஒன்றான புவியியலில் விஞ்ஞான ரீதியான அம்சங்கள் அதிகம். முழுமையான விஞ்ஞானமாக


மணியம் சிவகுமார்
Maniyam Sivakumar

மணியம் சிவகுமார் உளவியல், கல்வியியல் போன்ற துறைகளில் தொடர் கல்வியை மேற்கொண்டு வருபவர். இதனால் தமது புலமைத்துவத்தை விரிவாக்குவதுடன் மட்டும் நிற்காமல், அவற்றை கருத்தாக்கம் செய்து ஆக்கமாகவும் படைக்கும் திறன் பெற்றவராக உள்ளார். 

இன்னும் இன்னும் காத்திரமான ஆய்வுப் படைப்புகள் வெளிவரவும் முழுமையாக உழைக்கின்றார். இதற்கிசைவான மனப்பாங்கு மற்றும் அறிவு, திறன், ஆளுமை உருவாக்கப் பின்புலத்தில் நிதானமாக காலடியும் எடுத்து வைக்கின்றார். இதன் தொடக்கமே இந்நூலாக்கப் பணிகள்